தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா: சென்னையில் இன்று 16 பேர் உயிரிழப்பு - சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை: கரோனா வைரஸ் பாதிப்பால் இன்று ஒரேநாளில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

covid deaths increases in chennai
covid deaths increases in chennai

By

Published : Jun 24, 2020, 2:42 PM IST

‌தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் கரோனா தொற்று வேகமாக பரவிவருவதால் தினந்தோறும் அதிக உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. அந்த வகையில், இன்று மட்டும் கரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் மூன்று பேரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இரண்டு பேரும், தனியார் மருத்துவமனையில் ஒருவரும், ராஜீவ்காந்தி, ஓமந்தூரார் மருத்துவமனைகளில் 10 பேரும் என மொத்தம் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையிலிருந்து வெளிமாவட்டங்களுக்கு ஏற்கனவே சென்றவர்கள் தான் நோய்த்தொற்றை பரப்பிவருகின்றனர் என்ற எண்ணத்தில் மக்கள் அவர்களை புறக்கணிக்கும் நிகழ்வுகளும் ஆங்காங்கே நடந்துவருகிறது. அரசின் மெத்தனப் போக்கினால் மட்டுமே இதுபோன்ற உயிரிழப்புகள் தொடர்கின்றன என குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகின்றன.

மேலும், ஊரடங்கு உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் ஜனவரி மாதம் முதலே செயல்படுத்த தவறியதால், தற்போதைய பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது என்றும் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதையும் படிங்க:கரோனாவில் இருந்து விடுபட இசை நிகழ்ச்சி!

ABOUT THE AUTHOR

...view details