தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் ஆயிரத்தை நெருங்கும் கரோனா உயிரிழப்பு! - தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு உயிரிழப்பு

சென்னை: கரோனா பாதிப்பால் தமிழ்நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்குகிறது.

Covid-19 death toll reaching 1000 mark in TN
கரோனா உயிரிழப்பு

By

Published : Jun 27, 2020, 11:33 AM IST

தமிழ்நாட்டில் 74 ஆயிரத்து 622 பேர் ஜூன் 26 வரை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் தொற்றால் 957 மரணமடைந்தனர். இதையடுத்து இன்று காலை நிலவரப்படி சென்னையில் மட்டும் 22 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இதன்மூலம் தற்போது கரோனா தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 963 ஆகியுள்ளது.

தொடரும் கரோனா வைரஸ் (தீநுண்மி) பரவலால் உயிரிழப்போரின் எண்ணிக்கை ஆயிரத்தை கடக்கும் இடர் ஏற்பட்டுள்ளது.

உலகத்தை ஆட்டிப்படைத்த கரோனா தொற்று இந்தியாவிலும் பரவியதைத் தொடர்ந்து, தற்போதுவரை ஐந்து லட்சம் பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சென்னைக்கு ஒரேயொரு பயணியுடன் வந்த விமானம்

ABOUT THE AUTHOR

...view details