கரோனா நோய்த்தொற்றைத் தடுக்கும்விதமாக மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில், பொதுமக்கள் அத்தியாவசிய நிகழ்ச்சிக்கான முன்கூட்டியே நிச்சயம்செய்யப்பட்ட திருமணங்கள், எதிர்பாராமல் ஏற்படும் மரணத்திற்கான இறுதிச் சடங்குகள், மருத்துவச் சிகிச்சைகள் தொடர்பான ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் பயணம் மேற்கொள்ள அனுமதித்து சென்னை மாநகராட்சியால் வழங்கப்பட்டுவந்தது.
தற்போது, தமிழ்நாடு அரசு, மாநில 'E-pass' கட்டுப்பாட்டு அறையின் வாயிலாக http://tnepass.tnega.org என்ற இணையதளத்தில் வழியே அனுமதி சீட்டு வழங்க உத்தரவிட்டுள்ளது.
அதன்படி முன்கூட்டியே நிச்சயம்செய்யப்பட்ட திருமணங்கள் அவசர மருத்துவச் சிகிச்சை (ரத்தம் சொந்தங்களுக்கு மட்டும்), எதிர்பாராத மரணம் (ரத்த சொந்தங்களுக்கு மட்டும்) அரசு வழிகாட்டுதலின்படி அரசு பயணச்சீட்டு வழங்கும் அதிகாரம் மாநில 'E-pass' கட்டுப்பாடு அறைக்கு State E-pass Control Room வழங்கப்பட்டுள்ளதால் http://tnepass.tnega.org என்ற இணையதளத்தின் வழியாக விண்ணப்பித்து பயன் அனுமதிச் சீட்டினை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
எனவே அவசர அனுமதிச் சீட்டு பெற சென்னை மாநகராட்சி அலுவலகத்திற்கு நேரில் வர வேண்டாம் என பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க :தமிழ்நாட்டின் வூஹான் ஆன கோயம்பேடு; தவறு எங்கே நடந்தது?