தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. குறிப்பாக சென்னையில் ராயபுரம், திருவிக நகர், கோடம்பாக்கம், அண்ணா நகர் போன்ற இடங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.
வைரஸ் பரவலை தடுக்க கிருமிநாசினி தெளிப்பது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது என பல்வேறு நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி எடுத்து வருகிறது. இருப்பினும் நோய் தாக்கம் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
இந்த நிலையில் கரோனா வைரஸ் தற்போது களைபணியாளர்களையும் தாக்கத் தொடங்கியுள்ளது. கரோனா வைரஸ்ஸை விரட்டும் பணியில் மாநகராட்சி சார்பாக 37 ஆயிரம் தூய்மைப் பணியாளர்களும் மற்ற மாநகராட்சி ஊழியர்களும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.
பணியாற்றி வரும் அனைத்து ஊழியர்களுக்கும் முகக் கவசம் கையுறைகள் ஆகியவை முறையாக வழங்கப்பட்டு வருகின்றன என மாநகராட்சி தெரிவித்து வந்துள்ள நிலையில் அப்பணியில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் என 219 நபர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சியின் 219 ஊழியர்களுக்கு கரோனா இந்த 219 நபர்களில் 9 பேர் மூத்த அலுவலர்கள் மற்ற 210 பேர் முன்னிலை ஊழியர்கள். இந்த 210 முன்னிலை ஊழியர்களும் களைப் பணியில் மக்களுடன் நேரடி தொடர்பில் இருந்தவர்கள். இதை அறிந்த மக்கள் தங்களுக்கும் வைரஸ் பரவி விடுமோ என்ற அச்சத்தில் இருக்கிறார்கள்.