தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் பல மாதங்களுக்குப் பின் கரோனாவால் இன்று ஒருவர் உயிரிழப்பு! - கொரோனா தொற்று

Tamil Nadu Covid 19 Cases: தமிழ்நாட்டில் இன்று (டிச.28) ஒரே நாளில் 23 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 156 பேர் கரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர். பல மாதங்களுக்கு பின் தமிழ்நாட்டில் ஒருவர் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

covid-19-cases-in-tamil-nadu-on-december-28-2023
தமிழ்நாட்டில் இன்று 23 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு - பல மாதங்களுக்கு பின் ஒருவர் உயிரிழப்பு..!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 28, 2023, 10:41 PM IST

சென்னை:தமிழ்நாட்டில் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து 156 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று (டிச.28) தமிழ்நாட்டில் புதியதாக 23 பேருக்குப் பாதிப்பு எனவும், சென்னையில் 55 வயது பெண் கொரோனா தொற்று பாதிப்பினால் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார் எனவும் பொதுச் சுகாதாரத் துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

கரோனா உருமாற்றம் அடைந்து பரவி வருகிறது. தமிழ்நாட்டில் ஒற்றை இலக்கத்தில் இருந்த பாதிப்பு தற்பொழுது இரட்டை இலக்கத்திற்கு மாறி வருகிறது. கரோனா வைரஸ் பாதிப்பின் போது, தொண்டை வலி, அதிக காய்ச்சல், சளி, இருமல், உடல் வலி போன்ற அறிகுறிகள் இருக்கும். அவ்வாறு இருந்தால் அவர்கள் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். மேலும் சளி, இருமல் இருப்பவர்கள் மற்றவர்களுக்கு நோய்த் தொற்று வரக்கூடாது என்பதற்காக தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வதுடன், முககவசம் அணிந்து செல்வதும் நல்லது என பொதுச் சுகாதாரத்துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாடு பொதுச் சுகாதாரத்துறை இயக்குநரகம் இன்று (டிச.28) வெளியிட்டுள்ள கரோனா பாதிப்புகள் குறித்த விபரங்களில் தமிழ்நாட்டில் கரோனா புதியதாகப் பரிசோதனைகள் 426 பேருக்கு மேற்கொள்ளப்பட்டது. அதன் மூலம் 23 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 156 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் இதுவரையில் 7 கோடியே 10 லட்சத்து 1 ஆயிரத்து‌ 303 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், கரோனா பாதிக்கப்பட்ட 55 வயது பெண் ஒருவர் ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

சென்னை மாவட்டத்தில் ஒரே நாளில் 16 பேருக்கும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் 3 பேர், நீலகிரி, சேலம், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் என மொத்தமாக 23 பேர் இன்று (டிச.28) கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என பொதுச் சுகாதாரத்துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:மதுரை தனியார் மால் தீ விபத்து; வணிக வளாகத்தின் உறுதித்தன்மை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details