தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

10 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த கரோனா சிகிச்சை பெறுவர்களின் எண்ணிக்கை! - கரோனா பாதிப்பு எண்ணிக்கை தற்போது

சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக ஆயிரத்து 27 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வு துறை அறிவித்துள்ளது. இருப்பினும் கரோனாவுக்காக சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரித்துக்கும் கீழ் குறைந்துள்ளது.

covid 19 active cases
கரோனா பாதிப்பு நிலவரம்

By

Published : Dec 25, 2020, 10:30 PM IST

இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வு துறை இன்று (டிச. 25) தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் புதிதாக 65 ஆயிரத்து 142 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் வசித்து வரும் ஆயிரத்து 24 நபர்களுக்கும், ஆந்திராவிலிருந்து தமிழ்நாடு வந்த மூன்று நபர்கள் என ஆயிரத்து 27 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

10 ஆயிரத்துக்கும் குறைந்த சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை

மாநிலத்தில் இதுவரை ஒரு கோடியே 31 லட்சத்து 94 ஆயிரத்து 586 நபர்களுக்கு ஆர்டிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் 8 லட்சத்து 12 ஆயிரத்து 142 நபர்கள் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

அவர்களில் தற்போது மருத்துவமனையில் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் என 9 ஆயிரத்து 129 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் குணமடைந்த ஆயிரத்து 103 நபர்கள் வீட்டுக்கு இன்று திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 7 லட்சத்து 90 ஆயிரத்து 965 என உயர்ந்துள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகளில், சிகிச்சை பலனின்றி தனியார் மருத்துவமனையில் 8, அரசு மருத்துவமனையில் 4 என 12 நபர்கள் மேலும் இறந்துள்ளனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 48 என உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு

சென்னை - 2,23,799

கோயம்புத்தூர் - 51,791

செங்கல்பட்டு - 49,632

திருவள்ளூர் - 42,402

சேலம் - 31,350

காஞ்சிபுரம் - 28,534

கடலூர் - 24,583

மதுரை - 20,420

வேலூர் - 20,109

திருவண்ணாமலை - 19,083

தேனி - 16,840

தஞ்சாவூர் - 17,002

திருப்பூர் - 16,818

விருதுநகர் - 16,267

கன்னியாகுமரி - 16,244

தூத்துக்குடி - 16,010

ராணிப்பேட்டை - 15,864

திருநெல்வேலி - 15,218

விழுப்புரம் - 14,928

திருச்சிராப்பள்ளி - 14,043

ஈரோடு - 13,479

புதுக்கோட்டை - 11,364

கள்ளக்குறிச்சி - 10,779

திருவாரூர் - 10,857

நாமக்கல் - 11,075

திண்டுக்கல் - 10,826

தென்காசி - 8,228

நாகப்பட்டினம் - 8,047

நீலகிரி - 7,863

கிருஷ்ணகிரி - 7,804

திருப்பத்தூர் - 7,395

சிவகங்கை - 6,481

ராமநாதபுரம் - 6,300

தருமபுரி - 6,342

கரூர் - 5,106

அரியலூர் - 4,625

பெரம்பலூர் - 2,253

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 929

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1024

ரயில் மூலம் வந்தவர்கள் - 428

இதையும் படிங்க: கோவிட்-19 நிலவரம்: உலகளவில் 8 கோடியை நெருங்கும் கரோனா பாதிப்பு!

ABOUT THE AUTHOR

...view details