'கோவி ஷீல்ட்' பரிசோதனை தொடங்கப்படவில்லை: ராதாகிருஷ்ணன் தகவல் - சென்னை செய்திகள்
சென்னை: தமிழ்நாட்டில் 'கோவி ஷீல்ட்' தடுப்பூசி பரிசோதனையை தற்போதுவரை தொடங்காததால் அதனை நிறுத்த வேண்டியதில்லை என மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
!['கோவி ஷீல்ட்' பரிசோதனை தொடங்கப்படவில்லை: ராதாகிருஷ்ணன் தகவல் கோவி ஷீல்ட்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-radha-1009newsroom-1599751551-1005.jpg)
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த கரோனா தடுப்பூசி 'கோவி ஷீல்ட்' தமிழ்நாட்டில் பரிசோதனை செய்வதற்காக தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டுவந்தனர். இந்நிலையில் 'கோவி ஷீல்ட்' பரிசோதனையை மத்திய அரசு இந்தியாவில் நிறுத்தியுள்ளது.
இது குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது, "தமிழ்நாட்டில் தன்னார்வலர்களைத் தேர்வுசெய்யும் பணியில் மட்டுமே ஈடுபட்டிருந்தோம். மனிதருக்குத் தடுப்பூசி செலுத்துவதற்கான பரிசோதனை தொடங்கப்படவில்லை.
இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு 'கோவி ஷீல்ட்' பரிசோதனை செய்யக் கூடாது எனத் தெரிவித்துள்ளது. எனவே மத்திய அரசு அனுமதி அளிக்கும் வரை பரிசோதனை தொடங்கப்பட மாட்டாது" எனத் தெரிவித்தார்.