தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை: சிறப்பு டிஜிபி வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற நீதிமன்றம் மறுப்பு - சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை: பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறப்பு டிஜிபிக்கு எதிரான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

சிறப்பு டிஜிபி வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற நீதிமன்றம் மறுப்பு
சிறப்பு டிஜிபி வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற நீதிமன்றம் மறுப்பு

By

Published : Apr 21, 2021, 9:32 PM IST

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறப்பு டிஜிபிக்கு எதிரான வழக்கை சிபிசிஐடி விசாரணை செய்து வருகிறது. இந்த வழக்கில், ஐபிஎஸ் அலுவலர்களுக்கும் தொடர்புள்ளதால், சிபிஐக்கு மாற்றக் கோரி, சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் கூடுதல் எஸ்.பி.யான கே.ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதிகள் சஞ்சிவ் பானர்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை எடுத்து விசாரணையை கண்காணித்து வருகிறார். சிறப்பு டிஜிபிக்கு எதிரான விசாரணையின் முன்னேற்றம் குறித்து அறிக்கை தாக்கல் செய்துள்ளோம். அந்த வழக்கு ஏப்ரல் 30ஆம் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. பெண் எஸ்பி அளித்த புகாரில் விசாரணை மேற்கொண்ட விசாரணை குழு, அதன் அறிக்கையை அரசிடம் அளித்துள்ளது என தெரிவித்தார்.

சிறப்பு டிஜிபி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உட்புகார் விசாரணைக் குழுவின் விசாரணைக்கும், சிபிசிஐடி விசாரணைக்கும் நேரில் ஆஜராகி முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம் எனக் கூறினார்.

இதையடுத்து தலைமை நீதிபதி அமர்வு, இந்த விவகாரம் தொடர்பாக நடைபெறும் விசாரணையை தனி நீதிபதி கண்காணித்து வருவதால், மேற்கொண்டு சிபிஐ விசாரணைக்கு மாற்றுவதற்கு அவசியம் இல்லை.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவு சிறப்பு டிஜிபிக்கு மீதான விசாரணையில் பாதிப்பை ஏற்படுத்தாது. அதேபோல நியாயமாகவும் நேர்மையாகவும் விசாரணை நடைபெற வேண்டுமென தெரிவித்த நீதிபதிகள், ஒருதலைப்பட்சமாக முடிவெடுக்கக் கூடாது என உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: மணப்பாறையில் திமுக பொறுப்பாளர்-வழக்கறிஞருக்கிடையே மோதல்!

ABOUT THE AUTHOR

...view details