தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராஜிவ் காந்தி கொலை விவகாரம்: ஓய்வு டிஜிபியின் தொப்பியை ஒப்படைக்க உத்தரவு! - ஓய்வு டிஜிபி தொப்பியை ஒப்படைக்க உத்தரவு

ஓய்வு பெற்ற தமிழ்நாடு காவல்துறை தலைவர் பிரதீப் வி பிலிப்பிடம் ராஜிவ் காந்தி படுகொலை சம்பவத்தில் ஆதராமாக விளங்கிய தொப்பி, நேம் பேட்ஜ் ஆகியவற்றை நிரந்தரமாக அவரிடம் ஒப்படைக்க சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜீவ் கொலை விவகாரம்: தமிழ்நாடு ஓய்வு டிஜிபி தொப்பி உள்ளிட்டவற்றை ஓப்படைக்க உத்தரவு!
ராஜீவ் கொலை விவகாரம்: தமிழ்நாடு ஓய்வு டிஜிபி தொப்பி உள்ளிட்டவற்றை ஓப்படைக்க உத்தரவு!

By

Published : Jan 7, 2022, 6:55 AM IST

Updated : Jan 7, 2022, 9:33 AM IST

சென்னை:தமிழ்நாடு காவல்துறையின் தலைவராக பணியாற்றியவர் பிரதீப் வி பிலிப். கடந்த 1991ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி மனித வெடிகுண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டபோது, ஸ்ரீபெரும்புதூரில் உதவி காவல் கண்காணிப்பாளராக இருந்த இவர் மயிரிழையில் உயிர் தப்பினார்.

ராஜிவ் காந்தி கொலை சம்பவத்தின்போது இவரது தொப்பி, நேம் பேட்ஜ் ஆகியவற்றில் ரத்தக்கறை படிந்து இருந்தது. இதன்காரணமாக அவற்றை ஆதாரமாக கைப்பற்றிய சிபிஐ அலுவலர்கள், வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

தான் பயன்படுத்திய தொப்பி, நேம் பேட்ஜ் ஆகியவற்றை ஒப்படைக்குமாறு பிரதீப் வி பிலிப் சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் தொப்பி, நேம் பேட்ஜ் ஆகியவற்றை பிரதீப் வி பிலிப் பயன்படுத்திக்கொள்ள அனுமதித்தது. அதே சமயம் ஓய்வு பெற்றதும் அவற்றை நீதிமன்றத்தில் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிரதீப் வி பிலிப், தொப்பி, நேம் பேட்ஜ் ஆகியவற்றை நிரந்தரமாக வைத்துக்கொள்ள அனுமதிக்கக்கோரி, சென்னை முதலாவது அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை நீதிபதி சந்திரசேகரன் நேற்று (ஜன.6) விசாரித்தார். அப்போது தொப்பி, நேம் பேட்ஜ் ஆகியவற்றை நிரந்தரமாக வைத்துக்கொள்ள அனுமதியளித்து அவர் உத்தரவிட்டார். அதேசமயம் விசாரணைக்கு தேவைப்படும்போது அதனை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:சீனா செல்லும் இம்ரான் கான்: காரணம் என்ன?

Last Updated : Jan 7, 2022, 9:33 AM IST

ABOUT THE AUTHOR

...view details