சென்னை:முன்னாள் பிரதமர் இராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தனின் பாஸ்போர்ட்டினை பறிமுதல் செய்த சிபிஐ அதிகாரிகள், அதை சென்னை அமர்வு நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தனர். இந்த வழக்கில் ஆயுள் கைதியாக வேலூர் மத்திய சிறையில் சாந்தன் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக இருந்த நளினி, முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரை விடுதலை செய்து கடந்த நவம்பர் 11ஆம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னதாக நீதிமன்றத்தில் உள்ள தனது பாஸ்போர்ட் 1995ஆம் ஆண்டு காலாவதியாகி விட்டதாகவும், அதை புதுப்பிப்பதற்காக, திருப்பித் தரக் கோரி சாந்தன் தரப்பில் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.