நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தை சேவியர் பிரிட்டோ என்பவர் தயாரித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் நடந்தது. இந்த நிகழ்ச்சியின்போது தெறி, விக்ரம் வேதா உள்ளிட்ட பட பாடல்கள் பயன்படுத்தியதாக தெரிகிறது.
இந்த பாடல்களின் உரிமையை "திங்க் மியூசிக்" நிறுவனமும், காப்புரிமையை நோவெக்ஸ் கம்யூனிேகேசன் நிறுவனமும் பெற்றுள்ளன.
இந்நிலையில் நோவெக்ஸ் கம்யூனிகேசன் நிறுவனம் எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. தற்போது மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ மீது வழக்குப்பதிவு செய்ய சிபிசிஐடி காவல் துறையினருக்கு எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து நோவெக்ஸ் கம்யூனிகேசன் நிறுவனத்தின் மண்டல மேலாளர் அரவிந்த் கிருஷ்ணன் கூறுகையில், "இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பாடல்களுக்கு தங்களது நிறுவனம் காப்புரிமை பெற்றுள்ளது. உரிய அனுமதியில்லாமல் தங்களது பாடல்களை பயன்படுத்தினால் காப்புரிமை சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க: மாஸ்டர் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்