சென்னை: சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு, விதிகளை மீறி கட்டிய கட்டுமானங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி, அந்த குடியிருப்பில் தரைதளம் மற்றும் முதல்மாடி உரிமையாளர் விஜயபாஸ்கர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், விதிமீறல்களைக்கட்டுப்படுத்துவது குறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்க மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டிருந்த நிலையில், மனுதாரருக்குச் சொந்தமான தரைதளத்தை வணிக பயன்பாட்டுக்கு பயன்படுத்தியதாகக்கூறி, குடியிருப்புக்கு மாநகராட்சி அலுவலர்கள் சீல் வைத்தனர்.
இந்த சீலை அகற்றக் கோரி விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் குமரேஷ்பாபு அடங்கிய அமர்வு, மாநகராட்சி ஆணையரை ஆஜராக உத்தரவிட்டபின், நடவடிக்கை எடுத்ததற்கு கண்டனம் தெரிவித்ததுடன், கட்டடத்தை சீல் வைத்தபோது இருந்த மாநகராட்சி அலுவலர்கள் யார் யார்? காவல் துறை அலுவலர்கள் யார் யார்? என்ற விவரங்களை நவம்பர் 7ஆம் தேதி தாக்கல் செய்ய மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டது.
இந்த வழக்கு இன்று(நவ.7) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கட்டடத்துக்குச் சீல் வைத்த நேரத்தில் அங்கிருந்த மாநகராட்சி மற்றும் காவல் துறை அலுவலர் பட்டியல் தாக்கல் செய்யப்பட்டது.