தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீதிபதிகள் தொடர்பாக குருமூர்த்தி சர்ச்சைக் கருத்து குறித்து மீண்டும் விசாரணை - துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி

நீதிபதிகள் நியமனம் தொடர்பாக துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வதற்கான அனுமதி கோரிய மனு மீது மீண்டும் விசாரணை நடத்தப்படும் என அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

v
v

By

Published : Oct 27, 2021, 10:41 PM IST

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் தேதி துக்ளக் பத்திரிகையின் 51வது ஆண்டு விழாவில் பேசிய அதன் ஆசிரியர் குருமூர்த்தி, உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் அரசியல்வாதிகளால் நியமிக்கப்பட்டவர்கள், யார் மூலமாவது யார் காலையோ பிடித்துதான் நீதிபதிகளாக வந்துள்ளனர் என்றார்.

இது வருத்தப்பட வேண்டியது, ஊழல் செய்பவர்களை நீதிமன்றங்கள் தண்டிப்பது இல்லை, ஆகவே தகுதியின் அடிப்படையில் நீதிபதிகள் வந்தால் இதுபோன்று நடைபெறாது என்றும் குருமூர்த்தி பேசியிருந்தார்.

இதை கண்டித்து சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி அப்போதைய அரசு தரப்பு தலைமை வழக்கறிஞர் விஜய நாராயணிடம் மனு ஒன்றை அளித்தார்.

அதில் துக்ளக் பத்திரிக்கையின் 51வது ஆண்டு விழாவில் நீதித்துறையும் நீதிபதிகளையும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசிய குருமூர்த்தி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர ஒப்புதல் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

ஆனால் அந்த மனுவை அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் நிராகரித்துவிட்டார். இந்நிலையில் தற்போது மீண்டும் அரசுத்தரப்பு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரிடம் தங்கள் தரப்பிடம் உரிய விசாரணை நடத்தப்படாமல் அந்த மனு நிராகரிக்கப்பட்டது, ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து ஏற்கனவே அரசு தரப்பு தலைமை வழக்கறிஞர் பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெற்ற, தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் மனு மீதான விசாரணை மீண்டும் நவம்பர் 11ஆம் தேதி நடைபெறும் என்றார்.

இதையும் படிங்க: துக்ளக் விழாவில் சர்ச்சை பேச்சு: வருத்தம் தெரிவித்த குருமூர்த்தி!

ABOUT THE AUTHOR

...view details