தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாலியல் புகார்: ராஜகோபாலனை 3 நாள்கள் காவலில் விசாரிக்க அனுமதி - ராஜகோபாலனை காவலில் விசாரிக்க அனுமதி

சென்னை: பத்ம சேஷாத்ரி பாலபவன் பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கைதுசெய்யப்பட்ட ஆசிரியர் ராஜகோபாலனை மூன்று நாள்கள் காவல் துறையினர் காவலில் வைத்து விசாரிக்க போக்சோ நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

போக்சோ நீதிமன்றம்
போக்சோ நீதிமன்றம்

By

Published : Jun 1, 2021, 5:18 PM IST

பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்தது, ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பியது தொடர்பாக, சென்னை கே.கே. நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பாலபவன் பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் கடந்த 24ஆம் தேதி கைதுசெய்யப்பட்டார்.

பிணை கோரி மனு

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் ஆசிரியர் ராஜகோபால் பிணை கோரி மனு தாக்கல்செய்துள்ளார். இதற்கிடையே, காவல் துறை தரப்பில், ராஜகோபாலனை ஐந்து நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோரி மனு தாக்கல்செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு மனுக்களும், நீதிபதி முகமது பாரூக் முன்பு இன்று (ஜூன் 1) விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஆசிரியர் ராஜகோபாலனின் பிணை மனு குறித்து காவல் துறை பதில் அளிக்க உத்தரவிட்டு, அந்த வழக்கை வரும் 3ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தார். ராஜகோபாலை காவலில் எடுத்து விசாரிக்கக் கோரிய காவல் துறை மனு இன்று விசாரணைக்கு வந்தது.

காவலில் விசாரிக்க அனுமதி

அப்போது, நீதிபதி முன்பு ஆசிரியர் ராஜகோபாலன் நேரில் முன்னிலைப்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, ஆசிரியர் ராஜகோபாலனை மூன்று நாள்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதியளித்தார். ஜூன் 4ஆம் தேதி மீண்டும் ராஜகோபாலனை முன்னிலைப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: ஆன்லைன் காதலியால் பாகிஸ்தான் சிறையில் மாட்டிய இந்திய இளைஞர் விடுவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details