தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் கஞ்சா விற்ற தம்பதி கைது - ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்திய தம்பதி கைது

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் கஞ்சா விற்பனை செய்து வந்த தம்பதியை காவல்துறையினர் கைது செய்தனர்.

கஞ்சா கடத்தல்
கஞ்சா கடத்தல்

By

Published : Jan 27, 2022, 12:52 PM IST

சென்னை: புதுவண்ணாரப்பேட்டையில் அதிகளவில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டுவருவதாக வந்த புகாரின் அடிப்படையில் காவலர்கள், தண்டையார்பேட்டையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஜோடி காவலர்களை கண்டவுடன் தப்பிச் செல்ல முயன்றுள்ளனர். உடனே அவர்களை மடக்கி பிடித்த காவலர்கள், அவர்களிடம் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவர்களிடமிருந்து நான்கு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து இருவரும் காவல்நிலையம் அழைத்து செல்லப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இருவரும் வியாசர்பாடி தாமோதரன் நகரைச் சேர்ந்த தினகராஜ்(27), அவருடைய மனைவி பிரியா(26) என்பதும், இவர்கள் இருவரும் ஆந்திராவிலிருந்து கஞ்சா வாங்கிவந்து புதுவண்ணாரப்பேட்டையில் விற்பனை செய்துவந்ததும் தெரியவந்தது. குறிப்பாக இருவர் மீதும் கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.

இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த காவலர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பிரியாவை புழல் சிறையிலும், தினகராஜை சைதாப்பேட்டை கிளை சிறையிலும் அடைத்தனர்.

இதையும் படிங்க: காதல் ஜோடி மாயம்: மின்கம்பத்தில் கட்டி வைத்து காதலனின் தாயார் மீது தாக்குதல்!

ABOUT THE AUTHOR

...view details