சென்னை பாடி குமரன் நகரில் வசித்துவந்தவர்கள் சந்திரசேகர்(46), மஞ்சுளா(36) தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆன நிலையிலும் குழந்தை இலலாத காரணத்தால், சில நாட்களாக மன விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இவர்களது வீடு கடந்த இரண்டு நாட்களாக திறக்கப்படாமலும், வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதாலும் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், காவல் நிலையத்தில் புகாரளித்தனர். பின் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, ஹாலில் இருந்த ஃபேனில் ஒரே புடவையில் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.