இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், ’தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தட்டச்சர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பள்ளிக் கல்வித் துறைக்கு 197 பேர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கான பணி இடங்களை ஒதுக்கீடு செய்வதற்குரிய கலந்தாய்வு வரும் 22ஆம் தேதி அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் நடைபெறும்.
தட்டச்சர்களுக்கு பணி ஒதுக்கீடு கலந்தாய்வு தேதி அறிவிப்பு! - தட்டச்சர்களுக்கு பணி ஒதுக்கீடு கலந்தாய்வு தேதி அறிவிப்பு
சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய கலந்தாய்வில் பள்ளிக் கல்வித் துறையை தேர்வு செய்த 197 தட்டச்சர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்வதற்கான கலந்தாய்வு வரும் 22ஆம் தேதி நடைபெறுகிறது என பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

தட்டச்சர்களுக்கு பணி ஒதுக்கீடு
கலந்தாய்விற்கு தேவையான ஏற்பாடுகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் செய்ய வேண்டும். அந்தந்த மாவட்டங்களில் உள்ள முதன்மை கல்வி அலுவலகங்களில் காலை 10 மணிக்கு உரிய ஆவணங்களுடன் பள்ளிக் கல்வித் துறையில் தட்டச்சர் பணியை தேர்வு செய்தவர்கள் கலந்துகொள்ள வேண்டும்’ என அதில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க:பள்ளி திறப்பு விவகாரத்தில் அரசை அழுத்தக்கூடாது! - உயர் நீதிமன்றம்