தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கு 2ஆம் தேதி கலந்தாய்வு! - teacher requirement

சென்னை : பள்ளிக்கல்வித்துறையில் புதிதாக 742 கணினி ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான ஆன்லைன் கலந்தாய்வு ஜனவரி 2, 3 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

school education
school education

By

Published : Dec 31, 2020, 9:05 AM IST

Updated : Dec 31, 2020, 9:13 AM IST

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள முதுகலை கணினி ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2018 -19 ஆம் கல்வி ஆண்டில் போட்டித் தேர்வு நடத்தப்பட்டது.

இதில், தேர்ச்சிபெற்ற முதுகலை கணினி ஆசிரியர்களை பணி நியமனம் செய்வதற்கான கலந்தாய்வு, கல்வி மேலாண்மை முறைமை இணையதளத்தின் மூலம் ஆன்லைன் முறையில் நடைபெற உள்ளது. தரவரிசைப் பட்டியலில் ஒன்று முதல் 400 வரை இடம்பெற்றுள்ளவர்களுக்கு ஜனவரி 2ஆம் தேதியும், 401 முதல் 742 வரை இடம்பெற்றவர்களுக்கு ஜனவரி 3ஆம் தேதியும் பணி ஒதுக்கீடு கலந்தாய்வு நடைபெற உள்ளது.

முதுகலை கணினி ஆசிரியர் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டவர்கள் முதலில் தங்கள் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு முதலில் தகவல் தெரிவிக்க வேண்டும். தேர்வு செய்யப்பட்டவர்கள் கலந்தாய்வின்போது ஆசிரியர் தேர்வு வாரியத்தின் ஹால் டிக்கெட், உண்மைக் கல்வி சான்றிதழ்கள், ஜாதி சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்கள் உடன் கலந்தாய்வில் கலந்து கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தேர்வு செய்யப்பட்டவர்களின் சான்றிதழ்களை சரிபார்த்த பின்னரே கலந்தாய்வில் கலந்துகொள்ள அனுமதிக்க வேண்டும். உங்களின் மூலம் நடைபெறும் கலந்தாய்வில் எந்தவிதப் புகாருக்கும் இடமின்றி அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றி நடத்திட வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒரு நபர் ஒரே ஆண்டில் இரு வேறு பட்டங்களை பெற்றிருத்தல் கூடாது உள்ளிட்ட வழிகாட்டுதல்களும் அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: முதுகலை கணினி ஆசிரியர் தேர்வு பட்டியல் வெளியீடு!

Last Updated : Dec 31, 2020, 9:13 AM IST

ABOUT THE AUTHOR

...view details