சென்னை:தமிழ்நாட்டில் உள்ள மேல்நிலை பள்ளிகளில் பணிபுரிய 14 பாட பிரிவுகளில், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் நிலை 1, கம்ப்யூட்டர் பயிற்றுநர் நிலை 1 உள்ளிட்ட 2,849 பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ், ஆங்கிலம், வணிகவியல், பொருளியல், கணக்கு, இயற்பியல் ஆகிய பாடங்களுக்கு நாளை (அக் . 15) காலை 9 மணி முதல் கலந்தாய்வு நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அனுப்பப்பட்ட அழைப்பு கடிதம் மற்றும் அனைத்து கல்வி சான்றிதழ் நகலுடன் வரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.