சென்னைமாநகராட்சியின் மாதாந்திர மாமன்றக் கூட்டம், ரிப்பன் மாளிகையில் மேயர் தலைமையில் இன்று (ஜன.30) நடைபெற்றது. அப்போது, மாமன்றத்தில் பேசிய சென்னை மாநகராட்சி வார்டு 24வது அதிமுக மாமன்ற உறுப்பினர் சேட்டு, ’மக்களின் நேரடிக்குறைகளை சரி செய்யும் பணியில் ஈடுபடும் கவுன்சிலர்களுக்கு சட்டப்பேரவை உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் போல ஊதியம் வழங்க வேண்டும். ஆனால் கூலியாக 800 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. எனவே சட்டப்பேரவை உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் போல் மாமன்ற உறுப்பினர்களுக்கும் மாதாந்திர ஊதியம் வழங்க வேண்டும்’ என கோரிக்கை வைத்தார்.
இடையில் குறுக்கிட்ட மாநகராட்சி துணை மேயர், கவுன்சிலர்களுக்கு மாத ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை அரசின் பரிசீலனையில் உள்ளது என்றார்.