சென்னை:மீன்வளம் மற்றும் கால்நடை துறை மீதான மானியக் கோரிக்கையின் போது உடுமலை அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் உடுமலை ராதாகிருஷ்ணன் கடந்த ஆட்சி காலத்தில் கால்நடை துறையில் பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்கள் கொண்டு வரப்பட்டதாக தெரிவித்தார்.
இதற்கு கால்நடை மற்றும் மீன்வளதுறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்து பேசுகையில், “தமிழ்நாட்டில் கால்நடைகளை பெருக்க வேண்டும் என்பதற்காக கடந்த ஆட்சியில் விலையில்லா கறவைப் பசு மற்றும் ஆடு வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கின்றனர்.
இதிலும் ஊழலா?
இதற்காக ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து கறவை மாடுகள் வாங்கப்பட்டன. நேரடியாக பயனாளிகளை அழைத்துச் சென்று மற்ற மாநிலங்களில் கறவை பசுவை வாங்கி இருக்க வேண்டும்.