தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எஸ்.பி.வேலுமணி மீது ஊழல் வழக்குப் பதிவு - first information report

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைக்கேடு புகாரில் லஞ்ச ஒழிப்பு துறை ஊழல் வழக்கு பதிவு செய்துள்ளது என முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்.பி.வேலுமணி மீது ஊழல் வழக்குப் பதிவு
எஸ்.பி.வேலுமணி மீது ஊழல் வழக்குப் பதிவு

By

Published : Aug 10, 2021, 7:09 PM IST

சென்னை: 2011ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் சட்டத்துறை அமைச்சராக எஸ். பி. வேலுமணி பொறுப்பு வகித்தார். பின்னர் 2014ஆம் ஆண்டு அமைச்சரவை மாற்றப்பட்டு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். 2016- 21ஆம் ஆண்டில் உள்ளாட்சி துறை அமைச்சராகவும் இருந்தார்.

இவர் பொறுப்பில் இருந்த 2014 - 18 காலகட்டத்தில் அவருக்கு நெருக்கமானவர்கள் நடத்தி வரும் நிறுவனங்களுக்கு முறைகேடாக டெண்டர் வழங்கியதாக அறப்போர் இயக்கம், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் கொடுத்திருந்தனர். மேலும், திருவேங்கடம் என்பவர் நேற்று வேலுமணி மீது 1 கோடி ரூபாய் மோசடி புகார் அளித்தார்.

அதனடிப்படையில் மோசடி, பொது ஊழியர் மோசடி செய்வதற்கான தண்டனை, கூட்டுச் சதி, குற்ற உடந்தை மற்றும் ஊழல் தடுப்புச் சட்டம் 1988 ஆகிய பிரிவுகளின் கீழ் எஸ்.பி.வேலுமணி உட்பட ஏழு நபர்கள், 10 நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

எஸ்.பி. வேலுமணி தவிர அவரது சகோதரர் அன்பரசன், கேசிபி நிறுவன மேலாண் இயக்குனர், சந்திரபிரகாஷ், நமது அம்மா நாளிதழ் நடத்திவரும் ஆர். சந்திரசேகர், ஆர். முருகேசன், ஜேசு ராபர்ட் ராஜா, சிஆர் கட்டுமானத்தின் நிறுவனர் கு.ராஜன் உள்ளிட்டோர் மீது முறைகேடாக டெண்டர் பெற்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வழக்கில் சிக்கியுள்ள நிறுவனங்கள்

  • தி ஏஸ்-டெக் மெஷினரி இந்தியா (The Ace-Tech Machinery India)
  • கான்ஸ்ட்ரோனிக்ஸ் இன்ப்ரா (Constronics Infra)
  • ஸ்ரீ மகா கணபதி ஜூவல்லர்ஸ் (Sri Maha Ganapati Jewelers)
  • ஆலயம் ஃபவுண்டேஷன்ஸ் ( Aalayam Foundations)
  • வைதூர்யா ஹோட்டல்ஸ் (Vaidurya Hotels)
  • ஆலம் கோல்ட் & டைமண்ட்ஸ் (Aalam Gold & Diamonds)
  • ஏஆர் இஎஸ் பிஇ இன்ஃப்ரா (AR ES PE Infra)

சென்னை மாநகராட்சியில் பல்வேறு திட்டங்களுக்கு ரூ. 464.02 கோடி மதிப்புள்ள டெண்டர் வழங்கப்பட்டிருப்பதாகவும், கோவை மாநகராட்சிக்கு ரூ.364.81 கோடி மதிப்புள்ள டெண்டர் வழங்கப்பட்டிருப்பதாகவும், இந்த டெண்டர்களை எஸ்.பி.வேலுமணியின் சகோதரர் அன்பரசனின் நிறுவனம் உட்பட வழக்கில் சிக்கியுள்ள நிறுவனங்களுக்கு முறைகேடாக டெண்டர் ஒதுக்கப்பட்டிருப்பதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பல மடங்கு வருவாய்

மேலும், வழக்கில் சிக்கியுள்ள நிறுவனங்கள் 2012-13ஆம் ஆண்டில் இருந்த வருவாயைவிட 2018 - 19ஆம் ஆண்டில் அவற்றின் வருவாய் பல மடங்கு உயர்ந்துள்ளதாகவும் பட்டியலிடப்பட்டுள்ளது.

வரதன் இன்ஃபராஸ்ட்ரக்சர் நிறுவனத்தின் வருவாய் 2012 - 13 ஆம் ஆண்டில் 2.02 கோடி ரூபாயாக இருந்த நிலையில், 2018 - 19ஆம் நிதியாண்டில் 66.72 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாகவும் அதன் மூலம் 3202.90 விழுக்காடு வருவாய் உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சி.ஆர்.கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தின் வருவாய் 11,363.15 விழுக்காடு வருவாய் அதிகரித்துள்ளதாகவும், கே.சி.பி என்ஜினியர்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சி 967.04 விழுக்காடு அதிகரித்துள்ளதாகவும் லஞ்ச ஒழிப்பு துறை தெரிவித்துள்ளது. ஏஸ் டெக் கம்பொனென்ட் நிறுவனம் 354.44% , எஸ்.பி.வேலுமணியின் சகோதாரர் அன்பரசன் நடத்திவரும் செந்தில் & கோ நிறுவனம் 112%, ஆலயம் பவுன்டேஷன் நிறுவனம் 2636.36% வருவாய் அதிகரித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

55 இடங்களில் சோதனை

மேலும், 2015 ஆம் ஆண்டில் இருந்து 2018 ஆம் ஆண்டுவரை ஓசூர் பில்டர்ஸ் நிறுவனம் 2008.60 விழுக்காடும், இதே காலகட்டத்தில் கன்ஸ்டாரானிக்ஸ் இந்தியா நிறுவனம் 4796.50 விழுக்காடும் அதன் வளர்ச்சியை அதிகரித்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல், கன்ஸ்ட்ராமால் கூட்ஸ் நிறுவனம் 2018இல் இருந்து 2020க்குள் 273.81% , ஆலம் கோல்டு & டைமன்ட் நிறுவனம் 50.21% வருவாய் அதிகரித்திருப்பதாக லஞ்ச ஒழிப்பு துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறையினர் எஸ்.பி. வேலுமணிக்கு தொடர்புடைய 55 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். 250 லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் உள்பட 500 மேற்பட்ட காவல் துறையினர் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: திமுக அரசே மக்கள் நலப் பணிகளில் கவனம் செலுத்து!'

ABOUT THE AUTHOR

...view details