சென்னை:சட்டப்பேரவையில் வினாக்கள் - விடை நேரத்தில் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் கேள்வி எழுப்பி பேசுகையில், "நாமக்கல்லில் உள்ள பாதாள சாக்கடை கால்வாயை தூர்வாரி அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். நகரின் மையப்பகுதியில் ஓடும் கால்வாயில், மழை நீர் கால்வாயை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
இதற்குப் பதில் அளித்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, "நாமக்கல்லில் விடுபட்ட பகுதிகளில் பாதாளச் சாக்கடைத் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். நகரின் மையப்பகுதியில் ஓடுவது ஆறு என்றாலும், அது நீர்வளத் துறைக்குச் சொந்தமானது. மழைநீர் கால்வாயை சரி செய்ய வேண்டியது அரசின் கடமை. எனவே சம்பந்தப்பட்ட துறையிடம் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும்" எனக் குறிப்பிட்டார்.