தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரூ. 25 கோடி செலவில் சென்னையில் சாலைகளை மேம்படுத்த திட்டம்! - chenni news in tamil

சென்னை நான்கு மண்டலத்தில் உள்ள உட்புற சாலைகளை ரூ. 25 கோடி செலவில் மேம்படுத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

corporation planned to improve the inner road in chennai worth 25crore rupees
ரூ. 25 கோடி செலவில் சென்னையில் சாலைகளை மேம்படுத்த திட்டம்

By

Published : Aug 24, 2021, 9:16 PM IST

சென்னை:சென்னை மாநகராட்சி நிர்வாகம், 387 கிமீ நீளத்திற்கு 471 பேருந்து வழித்தடங்களும், 5,525 கிமீ நீளத்திற்கு 33,374 உட்புறச் சாலைகளையும் பராமரித்து வருகிறது.

இந்தச் சாலைகளில் குழாய்கள், கேபிள் அமைக்கப்பட்டுள்ளதால் இவை அனைத்தும் அடிக்கடி தோண்டப்படுகிறது, இதனால் சாலையின் தரம் குறைகிறது. மேலும், சென்னையில் அதிக வாகன எண்ணிக்கை உள்ளதாக கருதப்படுகிறது, இது சாலையில் அதிகபட்ச தேய்மானத்திற்கு வழிவகுக்கிறது. இது தவிர பருவமழை சாலையை அதிக அளவில் பாதிக்கிறது.

இந்நிலையில், இது போன்ற காரணங்களால் அதிக அளவில் பாதிக்கப்பட்ட சாலைகள் உள்ள மண்டலம் 6,9,10 மற்றும் 13 ஆகிய நான்கு மண்டலத்தில் 372 இடங்களில் உட்புற சாலைகளை 25 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

இந்த 25 கோடி ரூபாயில், 90 விழுக்காடு அதாவது 22.50 கோடியை தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு நிதியிடம் கடன் வாங்கவும், மீதமுள்ள 2.50 கோடி அதாவது 10விழுக்காடு பணத்தை நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பங்களிப்புடனும் இந்த திட்டத்தை முடிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

இதையும் படிங்க:சிங்கார சென்னை 2.0 : பணிகள் குறித்து அரசு விளக்கம்!

ABOUT THE AUTHOR

...view details