இதுதொடர்பாக மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தொழில் வணிக நிறுவனங்கள் அலுவலகங்கள், அங்காடிகள் ஆகியவற்றுக்கு கரோனா வழிகாட்டுதல் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தளர்வுகளுடன் இயங்கும் தொழிற்சாலைகள் வணிக நிறுவனங்கள் வங்கிகள் மற்றும் வழிபாட்டு தலங்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை அரசு அறிவித்துள்ளது.
முகக்கவசம் அணிவது, இரண்டு மீட்டர் சமூக இடைவெளி கடைப்பிடிப்பது, கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது போன்ற வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற மாநகராட்சி சார்பில் பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இந்த வழிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள் கடைகள் மற்றும் தனி நபர்களிடம் இருந்து மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நேற்று ஒரு நாளில் மட்டும் 5 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு தொடங்கியது முதல் இந்நாள்வரை 2.65 கோடி ரூபாய் அபராதத் தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க:திருமணத்தை மீறிய உறவுக்கு எதிர்ப்பு தெரிவித்த கணவர் கொலை - 3 பேருக்கு ஆயுள்