சென்னை:பொது மற்றும் தனியார் கூட்டு முறையில் ராயபுரம், திரு.வி.க, தேனாம்பேட்டை ஆகிய மூன்று மண்டலத்தில் 372 இடங்களில் 430.11 கோடி ரூபாயில் புதிய கழிப்பறைகள் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டு உள்ளதாக நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னை மாநகராட்சியின் சார்பில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 954 பொதுக் கழிப்பிடங்கள் உள்ளன. இந்தக் கழிப்பிடங்கள் பொதுமக்கள் கட்டணம் இல்லாமல் பயன்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சியில் பொது மற்றும் தனியார் கூட்டு முறையில் 430 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ராயபுரம், திரு.வி.க. நகர் மற்றும் தேனாம்பேட்டை (மெரினா கடற்கரை) ஆகிய மண்டலங்களில் 372 இடங்களில் புதிய கழிப்பறைகளை கட்டி பராமரிக்க 8 ஆண்டுகளுக்கு பராமரிப்பை மேற்கொள்ளவும் தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் வழங்கும் நிகழ்ச்சி சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் நடைபெற்றது. பொது மற்றும் தனியார் கூட்டு முறையில் ராயபுரம் மண்டலத்தில் 227 இடங்களிலும் திரு.வி.க மண்டலத்தில் 134 இடங்களிலும் தேனாம்பேட்டை மண்டலத்தில் 11 இடங்களில் என 372 இடங்களில் புதிய கழிப்பறைகள் அமைய இருக்கிறது.
இதையும் படிங்க:ஸ்டாலின் நினைத்தால் அமெரிக்க அதிபராக கூட ஆகலாம் - டிடிவி தினகரன் விமர்சனம்
இதில் 90 இடங்களில் புதிதாக கழிவறைகளையும், 88 இடங்களில் ஏற்கனவே கட்டப்பட்டு அதிக அளவில் சேதம் அடைந்த கழிவறைகளையும், 194 இடங்களில் சிறிய அளவில் சேதம் அடைந்த கழிவறைகளையும் 430.11 கோடியில் 3 ஆயிரத்து 270 சீட்டுகளை கொண்ட கழிப்பறைகள் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது.