தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆணையர்கள் அதிரடி மாற்றம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு! - மாநகராட்சி ஆணையர்களை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: மாநகராட்சி ஆணையர்களை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

corporation commissioners transfered in TN

By

Published : Nov 5, 2019, 1:19 PM IST

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் அரசாணையில்,

உதகமண்டலம் நகராட்சி கமிஷனராக இருந்த நாராயணன் சென்னை மாநகராட்சி மண்டல அதிகாரியாகவும், ஓசூர் நகராட்சி கமிஷனராக இருந்த பாலசுப்ரமணியன் ஓசூர் மாநகராட்சி ஆணையராகவும், பொள்ளாச்சி நகராட்சி ஆணையராக இருந்த கண்ணன் திருநெல்வேலி மாநகராட்சி ஆணையராகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையராக இருந்த விஜயலட்சுமி தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்ட இணை இயக்குனராகவும், திருச்சி மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் ஆவடி மாநகராட்சி ஆணையராகவும், வேலூர் மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் திருச்சி மாநகராட்சி ஆணையராகவும், ஆவடி மாநகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி வேலூர் மாநகராட்சி ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க...வாழைப்பழத்தில் ரசாயன திரவியம்: நடவடிக்கை எடுக்குமா அரசு?

ABOUT THE AUTHOR

...view details