சென்னை மாநகராட்சியில் தேர்தலில் ஈடுபடும் ஊழியர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. இதனை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தொடங்கி வைத்து தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, "தூய்மைப் பணியாளர்கள், காவல் துறையினர் என 1 லட்சத்து 50 ஆயிரம் நபர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த திட்டமிட்டு, அதில் 50 ஆயிரம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேட்டி தற்போது தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாநகராட்சியில் பணிபுரியும் கிட்டத்தட்ட 1,500 நபர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இந்தப் பணிகள் 5 முதல் 6 நாட்களில் முடிந்துவிடும்.
தடுப்பூசி பற்றிய தவறான தகவல்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம். தற்போது 64 கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம்கள் உள்ளன. இன்னும் முகாம்களை அதிகரிக்க பணிகள் நடைபெற்று வருகின்றன" என்றார்.
இதையும் படிங்க: திருவண்ணாமலையில் இரண்டாம் கட்ட கரோனா தடுப்பூசிப் போடும் பணிகள் தொடக்கம்!