தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 28, 2020, 8:21 PM IST

ETV Bharat / state

தன்னார்வலர்களை பாராட்டி வீடியோ வெளியிட்ட மாநகராட்சி ஆணையர்!

சென்னை: வீடு வீடாக சென்று கரோனா பரிசோதனை செய்யும் தன்னார்வலர்களை பாராட்டி மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் காணொலி வெளியிட்டுள்ளார்.

மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

கரோனா பரவலைத் தடுக்க சென்னையில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. கரோனாவைக் கட்டுப்படுத்த மாநகராட்சியும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதன் ஒரு பகுதியாக, வீடு வீடாக சென்று பரிசோதனை செய்வதற்காக 92 தொண்டு நிறுவனம் மூலம் தன்னார்வலர்களை நியமிக்கப்பட்டுள்ளனர். அப்பணியில் அர்ப்பணிப்போடு செயல்படும் மாணவர்களைப் பாராட்டி காணொலி ஒன்றினை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வெளியிட்டுள்ளார்.

அதில், "மாநகராட்சியுடன் இணைந்து தன்னார்வலர்கள் கரோனா பரவலைத் தடுக்க வீடு வீடாகச் சென்று பரிசோதனை செய்துவருகின்றனர். இந்த பணியை ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து தொடங்கிவிட்டனர். இப்போது வரை இதனை சிறப்பாக செய்து கொண்டிருக்கும் அனைத்து பணியாளர்களுக்கும் மாநகராட்சி சார்பாகவும், தனிப்பட்ட முறையிலும் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேசிய காணொலி
அறிகுறி தென்பட்டதும் மருத்துவ முகாமிற்கு அழைத்துச் செல்வது, அவர்களுக்கு தேவையான சேவைகளை செய்வது போன்ற பணிகளை தன்னார்வலர்கள் சிறப்பாக செய்து வருவதால் முடிந்த அளவு பரவலை தடுத்துக்கொண்டிருக்கிறோம்.அது மட்டுமின்றி தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை வெளியில் செல்லவிடாமல் அவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி தருவது போன்ற உதவிகளை செய்வதற்காக தன்னார்வலர்களை மாநகராட்சி பணியமர்த்தியுள்ளது. இந்தப் பணி சமூகம் பெருமைப்படக்கூடிய ஒரு பணியாகும். அனைவரும் கரோனா காலம் முடியும் வரை மிகச் சிறப்பாக இப்பணியினை செய்து வரவேண்டும். சென்னையில் உள்ள 85 லட்சம் மக்களுக்கும் உங்கள் சேவை தேவை” எனக் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details