தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொராேனா வைரஸ் எதிரொலி - தமிழ்நாட்டில் பயோமெட்ரிக் வருகைப்பதிவு நிறுத்தம்! - தமிழகத்தில் பயோமெட்ரிக் வைப்பதில் விலக்கு

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலியாக, பள்ளிகளில் ஆசிரியர்கள் பயோமெட்ரிக் கருவியில் விரல்ரேகையை பதிவு செய்ய வேண்டாம் என பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

கொராேனா வைரஸ்
கொராேனா வைரஸ்

By

Published : Mar 9, 2020, 12:09 PM IST

Updated : Mar 9, 2020, 12:16 PM IST

உலகளவில் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் பரவத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், மத்திய அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மார்ச் 31-ஆம் தேதி வரை பயோ மெட்ரிக் வருகைப் பதிவைப் பயன்படுத்தாமல், வருகைப் பதிவேடு மூலம் தங்களின் வருகைப் பதிவை உறுதிப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா வைரஸ் பரவுதலைக் கட்டுப்படுத்தும் வகையில், உலக அளவில் கைகுலுக்குவதோ, முத்தமிடுவதோடு கூடாது எனவும், பொதுமக்கள் ஓரிடத்தில் கூடுதவற்கும் அனுமதிக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மத்திய அரசின் அறிவுரையைப் பின்பற்றி தமிழ்நாட்டிலும், ஆசிரியர்கள் பயோ மெட்ரிக் கருவியில் விரல்ரேகை மூலம் தங்களின் வருகைப் பதிவை மார்ச் 31ஆம் தேதி வரை மேற்கொள்ள வேண்டாம் எனவும், வருகைப்பதிவேட்டில் உரியப் பதிவை மேற்கொள்ளுமாறு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கொரோனா வைரஸ் அச்சம்: எல்லை கொடியேற்ற நிகழ்வுகளில் மாற்றம்

Last Updated : Mar 9, 2020, 12:16 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details