சென்னை மாநகராட்சிக்குள்பட்ட தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நடக்கும் உயிரிழப்புகள் குறித்து இணையதளம் மூலம் மாநகராட்சிக்கு தெரிவிக்கும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது. சென்னை மாநகராட்சி பகுதியில் இறந்த 236 நபர்களின் மரணம், அதன் விவரங்கள் இதுவரை முறையாக தெரிவிக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், மாநகராட்சி ஆணையருக்கு பொது சுகாதாரத் துறை இயக்குநர் இறப்பு விவரங்களை தினமும் சுகாதாரத் துறைக்கு தெரிவிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
இறந்தவர்களின் எண்ணிக்கையில் உள்ள மர்மம் குறித்து ஆய்வு நடத்த சுகாதரத் துறை கூடுதல் இயக்குநர் வடிவேலன் தலைமையில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு மாநகராட்சியில் விசாரணை செய்தபோது சென்னையில் பிறப்பவர்கள், இறப்பவர்களின் பெயர்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கு 21 நாள்கள் எடுத்துக் கொள்ளப்படும். அதன் பின்னர் தான் பதிவேற்றம் செய்வோம். அதனடிப்படையில் தான் சுகாதாரத் துறைக்கு முழு விவரங்கள் அளிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.