தமிழ்நாட்டில் கரோனா வைரஸின் தாக்கம் தீவிரமாக பரிவருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் இத்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. சென்னையில் நேற்று (மே 29) மட்டும் இதுவரை இல்லாத அளவில் புதிதாக 618 பேருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டது.
இதனால், சென்னையில் இதுவரை 13,622 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் பரவலை தடுக்க மாநகராட்சி பல்வேறு நடவடிக்கை எடுத்து வந்தாலும் தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில், மே 17ஆம் தேதி அன்று சென்னயைில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51ஆக இருந்த நிலையில் மே 30 தேதி 109ஆக அதிகரித்துள்ளது.
13 நாட்களில் கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்டோர் கரோனாவால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 28 பேர் உயிரிழந்தனர். இதுவரை சென்னையில் கரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களை மண்டல வாரிய பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி, பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழந்தவர்களின் விவரங்கள் பின்வருமாறு:
ராயபுரம் - 2446 பாதிப்புகள், 28 உயிரிழப்புகள், திரு.வி.க. நகர் - 1437 பாதிப்புகள், 21 உயிரிழப்புகள், வளசரவாக்கம் - 816 பாதிப்புகள், 04 உயிரிழப்புகள், தண்டையார்பேட்டை - 1425 பாதிப்புகள், 13 உயிரிழப்புகள், தேனாம்பேட்டை - 1500 பாதிப்புகள், 14 உயிரிழப்புகள், அம்பத்தூர் 539 பாதிப்புகள், 01 உயிரிழப்புகள், கோடம்பாக்கம் - 1678 பாதிப்புகள், 08 உயிரிழப்புகள், திருவொற்றியூர் - 414 பாதிப்புகள், அடையாறு - 745 பாதிப்புகள், 05 உயிரிழப்புகள், அண்ணா நகர் - 1143 பாதிப்புகள், 14 உயிரிழப்புகள், மாதவரம் - 298 பாதிப்புகள், 01 உயிரிழப்புகள், மணலி - 190 பாதிப்புகள், சோழிங்கநல்லூர் - 233 பாதிப்புகள், பெருங்குடி - 226 பாதிப்புகள், ஆலந்தூர் - 188 பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், 6869 பேர் இத்தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்து, வீடு திரும்பியுள்ளனர்.
இதையும் படிங்க:வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் இருவருக்கு கரோனா உறுதி!