சென்னையில் நாளுக்கு நாள் கரோனா வைரஸ் தொற்று பரவியவரின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே உள்ளது. அதிலும் குறிப்பாக காவலர்கள் கரோனா தொற்றில் தினமும் பாதிக்கப்படுகின்றனர்.
காவலர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கிய காவல் ஆணையர் புதுப்பேட்டை, நரியங்காடு காவலர் குடியிருப்பில் வசித்து வரும் காவலர்கள் பலர் கரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதனால் இந்த இடம் முழுவதும் தினமும் கிருமி நாசினி மருந்து தெளித்தும் தகுந்த இடைவெளி பின்பற்ற வேண்டும் எனவும் சுகாதரத்துறை அலுவலர்கள் தெரிவித்துவருகின்றனர்.
காவலர்கள் குடும்பத்தினருக்கு கபசுர குடிநீர் வழங்கிய காவல் ஆணையர் இதனையடுத்து ஓமந்தூரார் அரசு மருத்துவமனை - சென்னை காவல் துறை இணைந்து புதுப்பேட்டை, நரியங்காடு காவலர் குடியிருப்புகளில் கரோனா தடுப்பு முகாமை நடத்தியுள்ளனர். இந்த முகாமில் முகக்கவசம் அணிதல், தகுந்த இடைவெளி, கை கழுவுதல் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து காவலர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
மேலும் இந்த விழிப்புணர்வு முகாமில் கலந்துகொண்ட காவல் ஆணையர் விஸ்வநாதன் அங்கிருந்தவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இயற்கை பானம், கபசுரக் குடிநீர் பவுடர், விழிப்புணர்வு நோட்டீஸ் ஆகியவற்றை வழங்கினார்.