ஒவ்வொரு மாவட்டத்திலும் மண்டலவாரியாக கரோனா பாதிப்பு குறித்து ஆய்வு செய்து மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த ஐஏஎஸ் / ஐபிஎஸ் அலுவலர்கள் தலைமையில் சிறப்பு குழுவை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது.
சிறப்பு குழு செய்ய வேண்டிய பணிகள் குறித்து தமிழ்நாடு அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “இந்தக் குழுக்கள் மாவட்ட தலைமையிலான குழுவுடன் ஒருங்கிணைத்து குறிப்பிட்ட மாவட்டங்களைப் பார்வையிட வேண்டும். கரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்களையும், அவர்களை சார்ந்தவர்களையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். சோதனை முடிவுகளை உடனடியாக வெளியிடுவதை உறுதி செய்ய வேண்டும் ” எனத் தெரிவித்துள்ளது