சென்னை மருத்துவக் கல்லூரியின் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு மார்ச் மாதம் முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தப்போது அதற்கு ஏற்ப மருத்துவமனையில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.
இந்த நிலையில் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹியை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.
கரோனா வார்டில் அமைச்சர் ஆய்வு அதனைத்தொடர்ந்து கரோனா நோயாளிகளை நேரில் சென்று பார்த்து அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இதுவரை 26, 500 கரோனா நோயாளிகள் பிற நோய்களுடன் இருந்தும் சிகிச்சை பெற்று சென்றுள்ளனர். இந்த நிலையில் 3 அடுக்கு கட்டடத்தில் 3 வது தளத்திலும் கரோனா சிறப்பு பிரிவு ஆரம்பிக்கப்பட்டவுள்ளது.
சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் திரணிராஜன் கூறும்போது, ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கரோனா தொற்று உறுதிச்செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ள தலைமை நீதிபதி நலமுடன் இருக்கிறார்.அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன. மேலும் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் மூன்றாவது அடுக்குமாடி கட்டடத்தில் மூன்றாவது தளத்தில் 120 படுக்கைகள் கொண்ட சிறப்பு பிரிவு ஆரம்பிக்கப்பட்டவுள்ளது என்று கூறினார்.