சென்னை அயனாவரத்தில் அமைந்துள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையின் கதிரியக்கவியல் துறையில் ரூ. 21லட்சம் மதிப்பிலான புற்றுநோய் குணப்படுத்தும் கருவியை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், "மருத்துவ துறையில் இது ஒரு பொற்காலம். வெளிநாடுகளுக்கு இணையாக சர்வதேச தரத்திலான மருத்துவ கட்டமைப்பு தமிழ்நாட்டில் உருவாகி உள்ளது. தமிழ்நாட்டில் கரோனா காலங்களில் போர்க்கால அடிப்படையிலான மருத்துவ கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது.
மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அயனாவரம் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் இதுவரை 3500 கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். 98.04 விழுக்காடு நோயாளிகள் நோயில் இருந்து மீண்டுள்ளனர். நவம்பர், டிசம்பர் மாதங்களில் கரோனா தொற்று உறுதிசெய்யப்படுவோர் எண்ணிக்கையானது இரண்டு விழுக்காட்டிற்கும் குறைவாகவே உள்ளது. அதாவது 1.7 விழு்ககாடாக குறைந்துள்ளது. கரோனா தடுப்பூசி பரிசோதனைகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதற்கான முன்னேற்பாட்டு கட்டமைப்புகள் தயார் நிலையில் உள்ளன" என்றார்.
இதையும் படிங்க: “நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தால் திமுகவிற்கு பாதிப்பு ஏற்படும் என சொல்ல முடியாது” - கார்த்திக் சிதம்பரம்