தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெல்லையில் கொரோனா மையம்: அமைச்சர் விஜய பாஸ்கர் அறிவிப்பு - கொரோனா வைரஸ் ஆய்வு

திருநெல்வேலி: மாவட்ட அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பரிசோதனை மையம் அமைய உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் கூறினார்.

திருநெல்வேலியில் கொரோனா வைரஸ் பரிசோதனை மையம்!
திருநெல்வேலியில் கொரோனா வைரஸ் பரிசோதனை மையம்!

By

Published : Mar 16, 2020, 2:06 PM IST

சட்டப்பேரவையில் பாளையங்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் மைதீன்கான் கேள்வி எழுப்பினார். அதில் திருநெல்வேலி மாவட்ட அரசு மருத்துவமனையில் குடிநீர், பொதுசுகாதார வசதிகளை மேம்படுத்த கோரிக்கைவைத்தார்.

இதற்குப் பதிலளித்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜய பாஸ்கர், "கடந்த மூன்று ஆண்டுகளில் கேத் லேப், ஆண்டுக்கு 250 மாணவர்கள் சேர்க்கையுடன், தேவையான அனைத்து நடவடிக்கைகளும் வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன. இந்த மருத்துவமனை தென் தமிழ்நாட்டில் மிகப்பெரிய மருத்துவமனையாக உள்ளது.

அதுமட்டுமின்றி கொரோனா வைரஸ் ஆய்வு செய்வதற்கான வசதிகளை மேம்படுத்தி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். திருநெல்வேலி மாவட்ட அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பரிசோதனை மையம் அமைய உள்ளது" என்று கூறினார்.

இதையும் படிங்க...சட்டப்பேரவை நிகழ்வுகள்: உடனுக்குடன் வழங்குகிறது நமது ஈடிவி பாரத்...

ABOUT THE AUTHOR

...view details