சென்னை:மக்கள் நல்வாழ்வுத் துறை இன்று வெளியிட்டுள்ள புள்ளிவிவரத் தகவலில், "தமிழ்நாட்டில் மேலும் புதிதாக ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 428 நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் தமிழ்நாட்டில் இருந்த 2,651 நபர்களுக்கும், ஆந்திராவிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்த ஒருவருக்கும் என 2,652 நபர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கரோனா பாதிப்பு எண்ணிக்கை
தமிழ்நாட்டில் இதுவரை மூன்று கோடியே 38 லட்சத்து 29 ஆயிரத்து 697 நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மாநிலத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 25 லட்சத்து 21 ஆயிரத்து 438 ஆக உள்ளது.
தற்போது, மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் 31 ஆயிரத்து 819 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
குணமடைந்தோர் எண்ணிக்கை
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நோயாளிகளில் இன்று 3104 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 24 லட்சத்து 56 ஆயிரத்து 165 ஆக உயர்ந்துள்ளது.
உயிரிழந்தோர் எண்ணிக்கை
மேலும் தனியார் மருத்துவமனையில் 12 நோயாளிகளும், அரசு மருத்துமனையில் 24 நோயாளிகளும் என 36 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 33 ஆயிரத்து 454 ஆக அதிகரித்துள்ளது.
கோயம்புத்தூரில் 790 நபர்களும், ஈரோட்டில் 193 நபர்களும், சேலத்தில் 170 நபர்களும், தஞ்சாவூரில் 191 நபர்களும், திருப்பூரில் 157 நபர்களும் என மாவட்டங்களில் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை நிலவரம்
கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் தற்போது சென்னையில் 1680 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
கோயம்புத்தூரில் 3,905 நபர்களும், ஈரோட்டில் 2742 நபர்களும், சேலத்தில் 2031 நபர்களும் என அதிக அளவில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
படுக்கைகள் காலி
மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சை அளிப்பதற்காக உருவாக்கப்பட்ட படுக்கை வசதிகளில் 74 ஆயிரத்து 250 படுக்கைகள் காலியாக உள்ளன.
மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு
- சென்னை மாவட்டம் - 535278
- கோயம்புத்தூர் மாவட்டம் - 225334
- செங்கல்பட்டு மாவட்டம் - 159430
- திருவள்ளூர் மாவட்டம் - 112144
- சேலம் மாவட்டம் - 91043
- திருப்பூர் மாவட்டம் -85673
- ஈரோடு மாவட்டம் - 91205
- மதுரை மாவட்டம் - 73026
- காஞ்சிபுரம் மாவட்டம் - 70921
- திருச்சிராப்பள்ளி மாவட்டம் - 71033
- தஞ்சாவூர் மாவட்டம் - 65747
- கன்னியாகுமரி மாவட்டம் - 59472
- கடலூர் மாவட்டம் - 59020
- தூத்துக்குடி மாவட்டம் - 54692
- திருநெல்வேலி மாவட்டம் - 47433
- திருவண்ணாமலை மாவட்டம் - 50788
- வேலூர் மாவட்டம் - 47436
- விருதுநகர் மாவட்டம் - 45112
- தேனி மாவட்டம் - 42650
- விழுப்புரம் மாவட்டம் - 43171
- நாமக்கல் மாவட்டம் - 46055
- ராணிப்பேட்டை மாவட்டம் - 41500
- கிருஷ்ணகிரி மாவட்டம் - 40759
- திருவாரூர் மாவட்டம் - 37296
- திண்டுக்கல் மாவட்டம் - 31853
- புதுக்கோட்டை மாவட்டம் - 27585
- திருப்பத்தூர் மாவட்டம் - 27830
- தென்காசி மாவட்டம் - 26619
- நீலகிரி மாவட்டம் - 29486
- கள்ளக்குறிச்சி மாவட்டம் - 28104
- தருமபுரி மாவட்டம் - 25443
- கரூர் மாவட்டம் - 22374
- மயிலாடுதுறை மாவட்டம் - 20508
- ராமநாதபுரம் மாவட்டம் - 19816
- நாகப்பட்டினம் மாவட்டம் - 18161
- சிவகங்கை மாவட்டம் - 18277
- அரியலூர் மாவட்டம் - 15368
- பெரம்பலூர் மாவட்டம் - 11286
- சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் -1006
- உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் -1075
- ரயில் மூலம் வந்தவர்கள் - 428