சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் கொரோனா பெருந்தொற்று பரவாமல் தடுக்க மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. அனைத்து வார்களிலும் இயந்திரங்கள், சுகாதாரப் பணியாளர்கள் மூலம் சாலைகள் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கிருமிநாசினி கலந்த கலவை பீச்சியடித்து நோய்த் தொற்று பரவாமல் சுத்தப்படுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
சென்னையில் ட்ரோன் மூலம் தெளிக்கப்பட்ட கிருமிநாசினி! - சென்னையில் ட்ரோன் மூலம் தெளிக்கப்பட்ட கிருமிநாசினி
சென்னை: மாநகராட்சி சார்பில் சில வார்டுகளில் ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

Corona virus Spreed: drone spraying of disinfection by corporation
இதனைத் தொடர்ந்து 76, 77, 78 ஆகிய வார்டு பகுதிகளில் வானில் பறந்தபடி ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் செயல்படுத்தப்பட்டன. இதன் மூலம் மக்கள் வசிக்கும் அனைத்துப் பகுதிகளிலும் கிருமிநாசினி தெளிக்கப்படுவதால் கிருமி தொற்று முற்றிலும் அழிக்கப்பட்டு வருகின்றது.
இதையும் படிங்க...ஊரடங்கால் பசியில் வாடும் நாடோடி மக்கள்!
TAGGED:
Corona virus Spreed