தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையின் நிலை என்ன? - கோவிட்-19 வைரஸ் தொற்று கட்டுப்பாடுகள் - கரோனா வைரஸ் கட்டுப்பாடுகள்

சென்னை: கோவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் பொதுமக்களின் நடமாட்டம் குறைந்துள்ளதால் அதனுடைய பரபரப்பை இழந்துள்ளது.

சென்னையின் நிலை
சென்னையின் நிலை

By

Published : Mar 18, 2020, 9:05 PM IST

Updated : Mar 18, 2020, 9:26 PM IST

கோவிட்-19 வைரஸ் தொற்று தாக்கம் உலகம் முழுவதும் தற்போது உச்சத்தில் உள்ளது. சீனாவில் தொடங்கி உலகளவில் பரவிய கோவிட்-19 பெருந்தொற்று ஆயிரக்கணக்கான உயிர்களைக் காவு வாங்கியுள்ளது.

கடந்த மாதம் வரை சீனாவை மட்டுமே பெருமளவு பாதித்த இந்நோய் மார்ச் மாத தொடக்கத்தில் தென் கொரியா, ஈரானில் பரவத் தொடங்கி தற்போது, ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ் ஆகியவற்றையும் முடங்கச் செய்துள்ளது. இதன் தாக்கம் தற்போதுவரை ஆப்பிரிக்க நாடுகளில் அதிகமாக இருந்த நிலையில், தற்போது இங்கும் தலைகாட்டத் தொடங்கியுள்ளது.

சென்னையின் நிலை

வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்ட பல்வேறு நபர்கள் மூலம் இந்தியாவிற்கு கோவிட்-19 வைரஸ் பரவத் தொடங்கியது. இதனால் பெரும்பாலான நாடுகளில் பயணத் தடைகள், கூட்ட நெரிசலான இடங்களைத் தவிர்ப்பது என பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் 100க்கும் அதிகமானோர் கோவிட்-19ஆல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் கோவிட்-19 வைரஸ் தொற்றினை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளாவில் அதன் தாக்கம் அதிகமாக இருந்துவருகிறது. கோவிட்-19 வைரஸ் பாதிப்பைத் தடுப்பதற்காக கல்வி நிறுவனங்கள், தங்கும் விடுதிகள் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் பகுதிகளுக்கு மார்ச் 31ஆம் தேதி வரை மூட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் மருத்துவ கல்லூரிகள் தவிர அனைத்து கல்லூரிகளையும் மூட உத்தரவிடப்பட்டிருக்கிறது. திரை அரங்குகள், பூங்காங்கள், விளையாட்டு அரங்கங்கள், பார்கள், கிளப்புகள் ஆகியவையும் இதில் அடக்கம். வணிக கண்காட்சி, விளையாட்டு போட்டிகள், கோடைகால பயிற்சிகளுக்கும் அனுமதி இல்லை.

அங்கன்வாடி மையங்களும் மார்ச் 31ஆம் தேதி வரை மூடப்பட்டாலும் 15 நாட்களுக்கான உணவுப் பொருள்கள் அந்த குழந்தைகளின் குடும்பத்தாரிடம் வழங்கப்படும் எனவும் முதலைமச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இந்நிலையில் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் பெருமளவு பொதுமக்கள் நடமாட்டம் குறைந்துள்ளதால் அதனுடைய பரபரப்பை இழந்துள்ளது.

இதையும் படிங்க: ’போராட்டங்களில் குழந்தைகளை ஈடுபடுத்துவது தண்டனைக்குரிய குற்றம்’

Last Updated : Mar 18, 2020, 9:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details