சென்னை மாதூர் எம்.எம்.டி.ஏ. பகுதியைச் சேர்ந்த 50 வயது முதியவர் ஒருவர் நேற்று (மே 25) கரோனா தீநுண்மி பதிப்பு உறுதிசெய்யப்பட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் கரோனா சிகிச்சை வார்டில் மன உளைச்சலிலிருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இன்று அவர் வார்டில் உள்ள கழிவறைக்குச் சென்றுள்ளார். நீண்டநேரமாகியும் வெளியே வராததால் பிற நோயாளிகள் மருத்துவமனை காவலாளியிடம் தெரிவித்துள்ளனர்.