சென்னையின் சில மண்டலங்களில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்றே உயர்ந்து வருகிறது. கரோனா பரவலைத் தடுக்க மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதனால், ராயபுரம், தண்டையார்பேட்டை, தேனாம்பேட்டை போன்ற மண்டலங்களில் தற்போது தொற்று பரவல் சற்று குறைந்துள்ளது.
மேலும் சென்னையில் தினமும் 500க்கும் குறைவானவர்களே தொற்றால் பாதிக்கப்படும் நிலையும் உருவாகியுள்ளது. இருப்பினும் அண்ணா நகர், கோடம்பாக்கம் போன்ற மண்டலங்களில் பரவல் சற்று அதிகமாக உள்ளது.
தற்போது அண்ணா நகரில், கோடம்பாக்கத்தில் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 22 ஆயிரத்தை கடந்துள்ளது . இந்தப் பரவலை குறைப்பதற்கு அந்தப் பகுதி முழுவதும் அதிக மருத்துவ முகாம்கள் மூலம் மக்களுக்கு தொடர்ந்து மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும் அதிகப்பட்சமாக 50 முதல் 59 வயது உள்ளவர்களே அதிக அளவில் கரோனா வைரஸ் பாதிக்கப்படுகின்றனர். சென்னையில் நேற்றுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் அதிகபட்சமாக 20.27 விழுக்காட்டினர் 50 முதல் 59 வயது உள்ளவர்கள் என சென்னை மாநகராட்சியின் புள்ளிவிவரம் தெரிவித்துள்ளது.
இதுவரையிலும் சென்னை மாநகராட்சியில் மொத்தம் 2 லட்சத்து 10 ஆயிரத்து 135 பேர் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 2 லட்சத்து 01 ஆயிரத்து 649 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எஞ்சியுள்ள 4 ஆயிரத்து 698 பேர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 3788 நபர்கள் உயிரிழந்துள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.
மண்டல வாரியான சிகிச்சை பெற்று வருபவர்களின் பட்டியல்,
கோடம்பாக்கம் - 278 பேர்
அண்ணா நகர் - 382 பேர்
ராயபுரம் - 250 பேர்
தேனாம்பேட்டை - 191 பேர்
தண்டையார்பேட்டை - 134 பேர்