தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கலைஞர் அரங்கை கரோனா தனிமை முகாமாக பயன்படுத்தலாம் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

சென்னை: அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கை கரோனா தனிமை முகாமாக அரசு பயன்படுத்திக் கொள்ளலாம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

corona virus dmk ensure to use their party office for quarentine
corona virus dmk ensure to use their party office for quarentine

By

Published : Mar 31, 2020, 12:35 PM IST

இதுதொடர்பாக திமுக தலைவர் பெருநகர் சென்னை மாநகராட்சி ஆணையருக்கு எழுதியுள்ள கடிதத்தில், உலகளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கான நோய்த் தடுப்பு, நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுவரும் மத்திய, மாநில அரசுகளுக்கு திமுக தன்னாலான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம்

அதன் தொடர்ச்சியாக, திமுக அறக்கட்டளைக்குச் சொந்தமான அண்ணா அறிவாலயத்திலிருக்கும் கலைஞர் அரங்கத்தை கரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள எண்ணுவோர் பயன்படுத்திக்கொள்வதற்கும் அரசு சார்பில் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றார்.

மேலும், இதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அரசு அலுவலர்களுக்கு திமுக சார்பில் முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:கரோனா நிவாரணம்: திமுக சார்பில் ஒரு கோடி நிதி

ABOUT THE AUTHOR

...view details