சென்னை:மெட்ரோ ரயில் நிறுவனம், பொது மக்களுக்கும் மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கும் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் ஒரு பகுதியாக, மெட்ரோ ரயிலில் பயணம் செய்வது எவ்வளவு பாதுகாப்பானது என்பதை பயணிகளுக்கு தெரிவிக்கும் வகையில் மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் மெட்ரோ ரயில்களில் கரோனா வைரஸ் பரவல் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது
இதன் தொடர்ச்சியாக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அகரம் கலை குழுவுடன் இணைந்து வருகின்ற 22ஆம் தேதி மாலை 7 மணி முதல் 7.50 மணிவரை விமான நிலையம் மெட்ரோ ரயில் நிலையத்தில் (தெரு நிலை) கரோனா வைரஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வை உருவாக்குவதற்கான நாடகம் நடைபெறுகிறது.