சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் எம்.முருகானந்தம் என்பவர் தாக்கல் செய்த மனுவில், கரோனா தொற்றில் இருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள இலவச தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாகவும், அதற்கு அடையாள அட்டைகள் கேட்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.
ஆனால், அடையாள அட்டை இல்லாத வீடில்லாத மக்கள், தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளவோ, மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெறவோ முடியாத நிலையில் உள்ளதாகவும், தடுப்பூசி செலுத்திக் கொண்டால் தான் அவர்களின் உயிரைப் பாதுகாக்க முடியும் எனவும் மனுவில் தெரிவித்துள்ளார்.
வீடு இல்லாத மக்களுக்கும் கரோனா தடுப்பூசி - தமிழ்நாடு அரசு - tamil nadu
சென்னை: தமிழ்நாட்டில் வீடில்லாத மக்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொற்று பாதிக்கும் அபாயம் உள்ள வீடில்லாத மக்களைக் கணக்கெடுத்து, அவற்றுள் அடையாள அட்டைகள் இல்லாதவர்களுக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என அவர் மனுவில் கோரியுள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், சி.சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், வீடு இல்லாத மக்களுக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகத் தெரிவித்தார்.
இதையடுத்து, கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான வழக்குகளுடன் சேர்த்து விசாரிப்பதற்காக இந்த வழக்கை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றப் பரிந்துரைத்து, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: தாயாரின் உடல்நிலை' - 30 நாள்கள் பரோல் கேட்டு நளினி கடிதம்