சென்னை: தமிழ்நாட்டில் ஒரு சில மாவட்டங்களில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மக்களின் உயிர்காக்க தடுப்பூசி மட்டுமே ஒரே ஆயுதமாக பார்க்கப்படுகிறது. இதனால், மக்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போடும் பணியை தமிழ்நாடு அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், நேற்று (செப்.12) தமிழ்நாடு முழுவதும், 40 ஆயிரம் முகாம்கள் அமைக்கப்பட்டு, ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடிகள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டது.