தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை வந்தடைந்தது கரோனா தடுப்பூசிகள்! - கரோனா தடுப்பூசிகள்

சென்னை: மும்பையிலிருந்து 1 லட்சம் டோஸ் கரோனா தடுப்பூசி மருந்துகள் சென்னை விமான நிலையம் வந்தடைந்த நிலையில், அதனை மாநில தடுப்பூசி சேமிப்பு மையத்திற்கு அலுவலர்கள் கொண்டு சென்றனர்.

Corona vaccine come chennai from mumbai
Corona vaccine come chennai from mumbai

By

Published : May 20, 2021, 9:55 PM IST

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தொடர்ந்து அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் பாரத் பயோடெக் நிறுவனத்தால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கோவேக்ஸின் தடுப்பூசியும், சீரம் நிறுவனத் தயாரிப்பில் உருவாக்கப்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசியும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ஏர் இந்தியா விமானம் மூலம் 1 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் மும்பையிலிருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்தன.

தடுப்பூசி மருந்துகளை சுகாதாரத்துறை அலுவலர்கள் பெற்றுக்கொண்டு சென்னை விமான நிலையத்திலிருந்து குளிர்சாதன வாகனம் மூலம் சென்னை DMS வளாகத்தில் உள்ள மாநில தடுப்பூசி சேமிப்பு மையத்திற்கு கொண்டு சென்றனர்.

ABOUT THE AUTHOR

...view details