தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை விமான நிலையம் வந்தடைந்த கோவிஷீல்டு தடுப்பூசிகள் - chennai district news

புனேவிலிருந்து விமானம் மூலம் சென்னைக்கு 14ஆயிரம் கோவிஷீல்டு கரோனா தடுப்பூசிகள் வந்தடைந்தன.

கோவிஷீல்ட் தடுப்பூசிகள்
கோவிஷீல்ட் தடுப்பூசிகள்

By

Published : Jun 10, 2021, 2:06 PM IST

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தொடர்ந்து அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் பாரத் பயோடெக் நிறுவனத்தால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கோவேக்ஸின் தடுப்பூசியும், சீரம் நிறுவனம் தயாரித்துள்ள கோவிஷீல்டு தடுப்பூசியும் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் புனேவிலிருந்து விமானம் மூலம் தற்போது சென்னைக்கு 2 பெட்டிகள் வந்தன. அப்பெட்டிகளில் மொத்தம் வந்த 14 ஆயிரத்து 420 கோவிஷீல்டு தடுப்பூசிகள் பெரிய மேட்டில் உள்ள மத்திய கிடங்கிற்குக் கொண்டு செல்லப்பட்டது.

முன்னதாக இன்று(ஜுன்.10) காலை சரக்கு விமானத்தில் வந்த கோவேக்ஸின் தடுப்பூசிகள் தேனாம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவ கிடங்கிற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details