தமிழ்நாட்டில் கரோனா தடுப்பூசி செலுத்துவதன் மூலம் கரோனா தொற்று பரவல் தொடர்ந்து கட்டுக்குள் உள்ளது. இதனால் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில் பாரத் பயோடெக் நிறுவனத்தால் உள்நாட்டில் தயாரிக்கப்படும் கோவாக்சின் தடுப்பூசியும், சீரம் நிறுவன தயாரிப்பில் உருவாக்கப்படும் கோவிஷீல்டு தடுப்பூசியும் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உடனடியாக தமிழ்நாட்டுக்கு கூடுதலாக தடுப்பூசி வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு, ஒன்றிய அரசிடம் வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு மக்கள் அனைவருக்கும் விரைவில் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு அரசு நேரடியாக தடுப்பூசிகளை கொள்முதல் செய்துவருகிறது.
இந்தச் சூழலில் தமிழ்நாடு அரசுக்கு பெங்களூரிலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் 42 பார்சல்களில் 5 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தன.
இந்தத் தடுப்பூசி சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மாநில தடுப்பூசி சேமிப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இது தடுப்பூசி பற்றாக்குறை உள்ள மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்படும் என சுகாதாரத் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
பெங்களூருலிருந்து விமானம் மூலம் வந்த கரோனா தடுப்பூசி - corona vaccine brought to tamilnadu via flight
சென்னை: பெங்களூருலிருந்து விமானம் மூலம் 5 லட்சம் கோவிஷீல்டு கரோனா தடுப்பூசி மருந்துகள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தன.
corona vaccine arrived at tamilnadu