கரோனா தடுப்பூசி:ஜன. 16 மதுரையில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் - Tamil latest news
10:55 January 10
கரோனா தடுப்பூசி திட்டத்தை வரும் 16ஆம் தேதியன்று தமிழ்நாடு முதலமைச்சர் மதுரையில் தொடங்கி வைக்கவுள்ளார்.
சென்னை: கரோனா தடுப்பூசி திட்டமானது வரும் ஜனவரி 16ஆம் தேதியன்று, நாடு முழுவதும் தொடங்கவுள்ளது. இத்திட்டத்தை தமிழ்நாட்டில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மதுரையில் தொடங்கி வைக்கிறார்.
தேசிய அளவில் ஜனவரி 17ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த போலியோ தடுப்புச் சொட்டு மருந்து முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே ஜனவரி 17ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து போடத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது ஜனவரி 16ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி மருத்துவர்களுக்கு போடப்பட உள்ளதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.